மஹிந்த ராஜபக்ஷ தயாரா? சவால் விடுக்கும் இரு அமைச்சர்கள்

0
169
Two ministers challenging mahinda rajapaksa

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிடம் பணம் பெற்றதாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் அமைச்சர்களான நவீன் திசாநாயக்க மற்றும் அஜித் பெரேரா ஆகியோர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளனர். (Two ministers challenging mahinda rajapaksa)

நவீன் திசாநாயக்க

2015 ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் இருந்து நிதியைப் பெறவில்லை என்று, மஹிந்த ராஜபக்ஷ சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிக்கத் தயாரா என்று பெருந்தோட்டத் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க சவால் விடுத்துள்ளார்

நியூயோர்க் ரைம்ஸ் அண்மையில் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றில், ஜனாதிபதி தேர்தலின் போது, சீன நிறுவனம் ஒன்றின் கணக்கில் இருந்து. 7.6 மில்லியன் டொலர் நிதி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தல் பரப்புரைக்காக வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இதனை சீனாவும், மஹிந்த ராஜபக்ஷவும் மறுத்திருக்கின்ற நிலையிலேயே அமைச்சர் நவீன் திசநாயக்க இந்தச் சவாலை விடுத்திருக்கிறார்.

”மகிந்தவுக்கு எதற்காக, சீன நிறுவனம் இந்தளவு பெருந்தொகையான நிதியைக் கொடுக்க வேண்டும்.?

அவ்வாறு நாங்கள் நிதி பெறவில்லை.

அப்படியானால், முன்னர் பிரித்தானியர் ஆட்சியில் இருந்த எமது நாடு இப்போது சீன ஆட்சியின் கீழா இருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் மீது நாங்கள் எந்த தவறையும் கூற விரும்பவில்லை. அவர் நாட்டுக்காக பணியாற்றினார். போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

எனவே, இந்த நிதியை நீங்கள் பெற வில்லை என்றால் ஒரு சத்தியக்கடதாசியை சமர்ப்பியுங்கள். அப்போது தான் உங்களை நம்புவோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அஜித் பெரேரா
நியூயோர்க் ரைம்ஸ் இதழுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ, முடிந்தால், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அஜித் பெரேராசவால் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மஹிந்த ராஜபக்ஷ சீனாவிடம் இருந்து பணம் பெறவில்லை என்று, சீனா நேரடியாகத் தெரிவிக்கவில்லை.

நியூயோர்க் ரைம்ஸ் இதழின் குற்றச்சாட்டுகள் பொய்யானால், மஹிந்த ராஜபக்ஷ அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அவர் தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Two ministers challenging mahinda rajapaksa,Two ministers challenging mahinda rajapaksa,Two ministers challenging mahinda rajapaksa,