இலஞ்சம் மற்றும் ஊழலை தடுக்க தேசிய செயற்திட்டம் அமுலுக்கு வருகின்றது!

0
128
government person arrest corruption spot action police pannipitiya

நாட்டில் தலைவிரித்தாடும் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்கும் தேசிய செயற்திட்டம் நடைமுறைப்படுத்தபடவுள்ளது. Sri Lanka New Project Implements Prohibit Corruption Bribe

இதற்கான ஊடகவியலாளர்களின் கருத்துக்கள் நேற்று பெற்றுக்கொள்ளப்பட்டன.

அரசியல் அற்ற தேசிய செயல் திட்டமொன்று இதுவரை இருக்கவில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே கருத்து தெரிவித்தார்.

எனினும், தற்போதைய அரசாங்கம் அவ்வாறான ஒரு செயற்பாட்டிற்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுள்ளது.

ஏதாவது ஒரு நிறுவனத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் இடம்பெறுமானால், அது குறிப்பிட்ட நிறுவனத் தலைவரின் பலவீனமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். பாடசாலை மட்டத்தில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு;ம்.

தமது நிறுவனத்திற்கு 200 விசேட விசாரணையாளர்களைச் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்தார்.

இந்த வருடம் 40 பேர் ஊழல் குற்றச்சாட்டில் தவறிழைத்தவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :