(Kilinochchi district 35 dengue cases last month alone blood samples)
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 35 டெங்கு நோயாளர்கள் இருக்கலாம் எனவும் சந்தேகத்தின் பெயரில் 35 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பது வழமை. (முன்னைய ஆண்டுத் தரவுகளின் அடிப்படையில்)
ஆனால், இந்த ஆண்டில் ஆனி மாதத்திலேயே இதுவரை 35 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இது வழமைக்கு மாறானது என சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னைய வருடங்களில் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் இணையத்தளத்திலுள்ள தரவுகளின் படி ஆனி மாதங்களில் ஆகக் கூடியது 21 (2017) டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டிருந்தனர்.
அத்துடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 170 டெங்கு நோயாளிகள் கிளிநொச்சியில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இது குறித்து சமுதாய மருத்துவ நிபுணர்களைத் தொடர்பு கொண்டு வினவியபோது, அவர்கள் ‘கடந்த வருட ஆனி மாதத் தரவுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஆனி மாதம் முடிவதற்கு முன்னரே மிக அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இது ஆபத்தான அறிகுறியாகும் (Outbreak situation) என்று தெரவித்தார்கள்.
எனவே, பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் உடனடியாக விழிப்படைந்து தத்தமது பிரதேசங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின் இவ்வருட இறுதிக்குள் பாரிய டெங்குப் பரவலைக் கிளிநொச்சி மாவட்ட மக்கள் எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
(Kilinochchi district 35 dengue cases last month alone blood samples
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் இப்படியா கேட்பது : என்ன மகத் இப்படி கேட்டுடிங்க
- பெண்களை விபச்சார தொழிலிற்காக சூனியம் செய்து கடத்திய தாதி
- யூ டியூப் உதவியுடன் தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்ட பெண்
- ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் அதிரடியாக கைது!!
- ஒரு நாள் இரவில் கோடீஸ்வரர்களான 22 பேர்: கேரளாவில் வங்கி குளறுபடி
- உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேற அமெரிக்கா திட்டம்!!
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?
- இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
- மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
- கருணைக் கொலை செய்யுங்கள்..! – திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு..!
- திருச்சியில் இளைஞருக்கு சரமாரியாக அடி உதை! (வீடியோ)
- பாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்!
- 8-வழிச் சாலை எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி! (காணொளி)
- முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்! – வைரலாகும் காணொளி!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :