விஜயகலாவை தற்காலிக பதவி நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

0
1049
ranil asked president remove Vijayakala ministerial portfolio

(ranil asked president remove Vijayakala ministerial portfolio)

நேற்றைய தினம் வடக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது விடுதலைப்புலிகள் மீண்டும் வருவது சிறந்தது என சர்ச்சைக்குரிய கருத்தை வௌியிட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து விலக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவிடம், விசாரணைகள் நிறைவு பெறும் வரை தற்காலிகமாக பதவி நீக்குமாறு கோரியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மீது கட்சித் தலைமை ரீதியாகவும், பாதுகாப்பு துறை ரீதியாகவும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கு, சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(ranil asked president remove Vijayakala ministerial portfolio)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :