மின்னலைப் பார்த்து பயந்த மணமகனை மேடையில் உதறி தள்ளிய மணமகள்

0
139
said bride should afraid lightning indiatamilnews tamilnews

said bride should afraid lightning indiatamilnews tamilnews

மின்னலை பார்த்து பயந்த மணமகனை மணமகள் வேண்டாம் என கூறி விட்டார்.

வடமாநிலங்களான பீகார், மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் வினோத காரணங்களுக்காக நடைபெறும் திருமணங்கள் மேடையிலேயே நின்று போவது உண்டு. அல்லது மணமகள் மணமகனை வேண்டாம் என சொல்லி விடுவது உண்டு.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உத்தரப் பிரதேசத்தில் மணமகளின் நெருங்கிய உறவினர் மற்றும் மாப்பிள்ளை உறவினருக்கு இடையே ரசகுல்லா பரிமாறுவதில் ஏற்பட்ட தகராறில் திருமணம் நின்று போனது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் முசாபர்நகரில் ஒரு திருமணத்தில் பந்தியில் இறைச்சி துண்டு இல்லை என திருமணத்தில் கலாட்டா ஏற்பட்டது. ஐஸ் கிரீம் இல்லாததால் ஏற்பட்ட கல்யாண கலாட்டாவில் பலர் காயம் அடைந்தும் உள்ளனர்.

தற்போது பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் மண மேடையில் வைத்து மணமகன் மின்னலை பார்த்து பயந்து வினோதமாக நடந்து கொண்டதால் மேடையில் வைத்தே மண மகள் மணமகனை வேண்டாம் என கூறி உள்ளார். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து மணமகனின் குடும்பத்தார் மண மகளின் குடும்பத்தினரை தாக்கி உள்ளனர். மணமகளின் குடும்பத்தாரை தாக்கியதற்காக மணமகனின் பக்கத்திலிருந்து மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

said bride should afraid lightning indiatamilnews tamilnews

tags;-accident aeroplane black box return

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :