அரசியலில் வாழ்வா.. சாவா…. விலகிய 16 பேருக்கும் நாளையே இறுதி தினம்….!

0
133
final decision tomorrow 16 members mahinda discuss latest tamil news

ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைந்து செயற்படுவதா அல்லது பிரத்தியேக அரசியலில் ஈடுபடுவதா என்பது குறித்து நாளை இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என ரணில் எதிர்ப்பு குழு தெரிவித்துள்ளது. (final decision tomorrow 16 members mahinda discuss latest tamil news)

குறித்த குழுவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் டி பி ஏக்கநாயக்க இதனை தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமையை தொடர்ந்து குறித்த 16 பேரும் தேசிய அரசாங்கத்திலிருந்து தங்களது அமைச்சு, இராஜாங்க அமைச்சு, மற்றும் பிரதி அமைச்சு பதவிகளை தியாகம் செய்து விலகிக்கொண்டனர்.

விலகிக்கொண்டமையை தொடர்ந்து அரசியல் அநாதைகளாக்கப்பட்ட நிலையில் குறித்த 16 பேரும் பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகின்றனர்.

எதிர்கட்சி தலைவர், மகாநாயக் தேரர்கள் உள்ளிட்ட பலரை இதுவரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைந்துக்கொள்வது தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.

இந்நிலையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள சந்திப்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கூட்டு எதிர்க் கட்சியின் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதாயின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்புக்களிலிருந்து நீங்கிக் கொள்ள வேண்டும் என்பது 16 பேர் கொண்ட குழுவுக்கு கூட்டு எதிர்க் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

tags :- final decision tomorrow 16 members mahinda discuss latest tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites