உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியதன் எதிரொலி! : ஐசிசியை கடுமையாக கலாய்த்த ஜேர்மனி!!!

0
684
Germany cricket troll ICC 2018 news Tamil

பிபா உலகக்கிண்ணத் தொடரில் நடப்பு சம்பியனான ஜேர்மனி வெளியேறியுள்ளமை ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உலக்ககிண்ண வாய்ப்பை தக்கவைக்க ஒரு வெற்றி தேவைப்பட்ட நிலையில், ஜேர்மனி அணி தென்கொரிய அணியிடம் 2-0 என தோல்வியடைந்து வெளியேறியது.

இதனால் ரசிகர்கள் தங்களது சோகத்தையும், கோபத்தையும் பல்வேறு செயல்கள் ஊடாக வெளிக்காட்டி வருகின்றனர்.

இதில் ஜேர்மனி கிரிக்கெட் சபையும் தங்களது ஆதங்கத்தை டுவிட்டர் மூலம் பதிவுசெய்துள்ளது.

ஜேர்மனி கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு, மறைமுகமாக சர்வதேச கிரிக்கெட் சபையை அவமதிப்பதாக அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனி கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளில் 10 அணிகளை மாத்திரம் உள்வாங்கவேண்டும்” என ஜேர்மனி கிரிக்கெட் சபை பதிவிட்டுள்ளது.

இதற்கான காரணம் சர்வதேச கிரிக்கெட் சபை, கிரிக்கெட் உலகக்கிண்ணத்தில் 10 அணிகளை மாத்திரமே உள்வாங்குகின்றது. இதனால் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கு உலகக்கிண்ணத்தில் விளையாடுவது ஒரு எட்டாக் கணியாகவே இருக்கின்றது.

இதனை சுட்டிக்காட்டும் வகையிலேயே ஜேர்மனி கிரிக்கெட் சபை இவ்வாறான டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டுள்ளது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Germany cricket troll ICC 2018 news Tamil, Germany cricket troll ICC 2018 news Tamil,Germany cricket troll ICC 2018 news Tamil