டெனிஸ்வரனை பதவிநீக்கம் செய்த தீர்மானத்திற்கு நீதிமன்றம் தடை

0
129
court bans decision dismiss Balasubramaniam Deniswaran

வடமாகாண முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ப.டெனிஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்திற்கு தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. (court bans decision dismiss Balasubramaniam Deniswaran)

வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த ப.டெனிஸ்வரன் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அமைச்சு பதவியில் இருந்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனையடுத்து, முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, ப. டெனிஸ்வரனை மேன்முறையீடு செய்திருந்தார்.

அரசியல் சாசனத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவரை பதவி நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தன்னை பதவி நீக்குவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

tags :- court bans decision dismiss Balasubramaniam Deniswaran

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites