றெஜினாவின் கொலைக்கு நீதி கோரி மகஜர் கையளிப்பு

0
110
Petition Handover justice Rejina’s murder

சுண்டுக்குழி பாடசாலை மாணவியின் கொலைக்கு நீதி கோரி, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். அரசாங்க அதிபரிடம் இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. (Petition Handover justice Rejina’s murder)

படுகொலைக்கு நீதியான விசாரணைகள் மேற்கோள்ளப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டுமென்றும் அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா துஸ்பிரயோகம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதியைக் கோரியும் மாணவர்களும் பொது மக்களும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைய இன்று கடையடைப்பு போராட்டங்களும் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு தொடர்ச்சியாக சுழிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று காலை அங்கிருந்து பேரணியாகச் சென்று சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளித்திருந்தனர்.

இதன்பின்னர் அங்கிருந்து பேரூந்துகளில் யாழ். சுண்டுக்குழியில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் மகஜரொன்றையும் கையளித்துடன், மாவட்ட அரசாங்க அதிபரிடமும் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

tags :- Petition Handover justice Rejina’s murder

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites