சாம்சங்-ஆப்பிள் போட்டி முடிவுக்கு வந்தது..!

0
801
apple samsung settle us patent dispute

(apple samsung settle us patent dispute)
ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களிடையே நிலவி வந்த காப்புரிமை விவகாரத்தை இரு நிறுவனங்களும் தாங்களாகவே முடித்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.

2011-ம் ஆண்டு துவங்கிய காப்புரிமை விவகாரத்தின் இறுதி தீர்ப்பு கடந்த மாதம் வெளியானது. அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகானத்தின் சான் ஜோஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.3600 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இறுதி தீர்ப்பை எதிர்த்து சாம்சங் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், “ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் காப்புரிமை விவகாரத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளன. மேலும் இவ்வழக்கு தொடர்பான மற்ற விவகாரங்களை அவர்களாகவே தீர்த்து கொள்வதாக தெரிவித்துள்ளன”.

apple samsung settle us patent dispute

Tamil News