இப்படியும் ஒரு மனைவி : நுவரெலியாவில் நடந்த முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்

0
144
wife refuse husband dead body nuwara eliya

நுவரெலியாவில் இதய நோயினால் உயிரிழந்த தனது கணவனின் சடலத்தை ஏற்றுக்கொள்ள மனைவி மறுத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.(wife refuse husband dead body nuwara eliya)

சடலத்தை ஏற்க வைத்தியசாலை வந்த போதும், தனது கணவர் அணிந்திருந்த தங்க நகைகளை காணவில்லை என கூறிய சடலத்தை ஏற்க மறுத்துள்ளார்.

அட்டனைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு நடந்து கொண்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுவரெலியா நகரத்தில் உள்ள பிரபல ஆலயத்தில் பூஜை நடத்துபவராக பணியாற்றிய 53 வயதான நபர் ஒருவரே உயிரிழந்தார்.
மனைவி சடலத்தை ஏற்காமல் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளமையினால் உறவினர் ஒருவர் சடலத்தை கொண்டு செல்ல முயற்சித்த போதிலும், அது முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்தவர் தங்கியிருந்த அறையில் பை ஒன்றில் அவர் அணிந்திருந்த தங்கம் கிடைத்துள்ள நிலையில், அடுத்த நாள் மனைவி சடலத்தை வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

tags – wife refuse husband dead body nuwara eliya

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites