சென்னை அடையாறு – கூவம் கரையோரப்பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படும் – முதலமைச்சர்

0
112
5 crore Chief Ministers public relief fund indiatmilnews tamilnews

announced 100crore allocated relief surrounding areas

சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள தணிப்புப் பணிகளை மேற்கொள்ள நடப்பாண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியார் மற்றும் நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரவையில் விதி எண். 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் விளைவுகளை சுட்டிக்காட்டினார்.

அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு, கூவம் மற்றும் கோவளம் ஆற்றுப்படுகைகளில், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் நீரில் மூழ்குகின்ற நிலைமை அவ்வப்போது ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்பகுதிகளில் வெள்ள தணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக நடப்பாண்டில் மாநில நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.

பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் 4 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ராமசாமி படையாச்சியார், சிவாஜி கணேசனின் பிறந்த நாட்கள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

சென்னை, கொல்கத்தா, திருச்சி, தஞ்சையில் செயல்பட்டு வரும் பூம்புகார் விற்பனை நிலையங்கள், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பொலிவு பெற அழகுபடுத்தப்படும், பூம்புகார் நிறுவனம் சார்பில் நடப்பாண்டு முதல், உலக அளவிலான கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடத்தப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.

announced 100crore allocated relief surrounding areas

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :