ஒற்றை நபரின் அதிகாரத்துக்குள் வரும் துருக்கி – பெரும் பலத்துடன் மீண்டும் ஜனாதிபதியாகிறார் எர்துவான்

0
430
tamilnews Erdogans reelection means Turkey become one rule

(tamilnews Erdogans reelection means Turkey become one rule)

துருக்கியில் நேற்று (25) இடம்பெற்ற தேர்தலில் துருக்கி ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள ரிசெப் தயிப் எர்துவான் புதிய நிர்வாக அதிகாரங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவுள்ளார்.

இதனால், பிரதமர் பதவி ஒழிக்கப்படுவதுடன், நாடாளுமன்றத்தின் அதிகாரமும் பலவீனமாகும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.

மீண்டும் துருக்கி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிசெப் தய்யிப் எர்துவான்.
துருக்கியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு கருத்து கணிப்பில் பிரதமர் பதவியை ஒழிப்பதற்கும், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த ஒப்புதல் உடனடியாக அமுலுக்கு கொண்டு வரப்படும்.

‘தனி ஒருவரின் ஆட்சி’ என்ற ஆபத்தான காலகட்டத்தில் துருக்கி தற்போது நுழைவதாக, எர்துவானை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முஹர்ரம் இன்ஸ் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலத்தில் துருக்கியில் நடந்த தேர்தல்களிலேயே மிகக் கடுமையான போட்டி நிலவிய நேற்றைய தேர்தலில் எர்துவான் 53 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

அவருக்கு அடுத்தபடியாக வந்த போட்டியாளர் இன்ஸின் பிரசாரம் உற்சாகமாக நடந்தது.

அவரது கூட்டங்களுக்கு ஏராளமான மக்கள் கூட்டம் குவிந்தது. ஆனால், அவரால் 31 சதவீத வாக்குகளையே பெற முடிந்தது.

64 வயதான எர்துவான் வலுவான பொருளாதாரத்தைத் தலைமையேற்று நடத்துகிறார். அவர் தமக்கான உறுதியான ஆதரவுத் தளத்தை உருவாக்கிக்கொண்டார்.

அதேநேரம் அவர் எதிர்ப்பாளர்களை ஒடுக்கினார். 1.6 லட்சம் பேரை சிறையில் அடைத்தார்.

நாட்டில் கருத்துகள் இரட்டை துருவங்களாகப் பிரிய வழிவகுத்தார்.

மேற்கத்திய நாடுகள் கொஞ்சம் தயக்கம் காட்டினாலும், வெற்றி பெற்ற எர்துவானுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

“எர்துவானின் மாபெரும் அரசியல் அதிகாரம் மற்றும் வெகுஜன ஆதரவு,” குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

புதிய அதிகாரங்கள் என்னென்ன?

தேர்தல் வெற்றிக்குப் பிறகு திங்கள்கிழமை காலை வழங்கிய தமது உரையில், வெகு விரைவில் புதிய அதிபர் ஆட்சி முறையை கொண்டு வருவதாக உறுதியளித்தார் எர்துவான்.

இந்த மாற்றங்களுக்கு மக்களின் ஒப்புதலைக் கோரும் சர்ச்சைக்குரிய கருத்து வாக்கெடுப்பு கடந்த ஆண்டு நடந்தது.

இதில், அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான எர்துவானின் திட்டத்துக்கு 51 சதவீதம் மக்கள் ஆதரவளித்து இருந்தனர்.

(tamilnews Erdogans reelection means Turkey become one rule)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites