இறுதி கட்டத்தில் திரில் கோல் போட்டு எகிப்தை வீழ்த்திய சவுதி அரேபியா!

0
666
tamilnews football egypt defeated saudi arabia fifa world cup

(tamilnews football egypt defeated saudi arabia fifa world cup)

21 வது ஃபிபா உலகக் கோப்பையில் இன்று இடம்பெற்ற போட்டியில் கடைசி விநாடியில் கிடைத்த கோலால் 2-1 என எகிப்தை, சவுதி அரேபியா அபாரமாக வெற்றி கொண்டது.

21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும். அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களை முடித்துள்ளன.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, எப் பிரிவில் இருந்து மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இன்று பிரிவு சுற்றில் மூன்றாவது ஆட்டங்கள் ஆரபித்தன. இதில் ஏ பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியுள்ள ரஷ்யா மற்றும் உருகுவே சந்தித்தன.

அதில் உருகுவே 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அதே நேரத்தில் இந்தப் பிரிவில் இருந்து வெளியேறும் சவுதி அரேபியா மற்றும் எகிப்து மற்றொரு ஆட்டத்தில் விளையாடின.

எகிப்துக்கு தோல்வி உலகக் கோப்பை போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என வென்று ரஷ்யா ஆச்சரியப்பட வைத்தது.

இரண்டாவது ஆட்டத்தில் எகிப்தும் உருகுவேவும் மோதின. இதில் நட்சத்திர வீரர் மொகம்மது சலாவின் எகிப்து அணியை 1 – 0 என்ற கோல் கணக்கில் உருகுவே வென்றது.

அதற்கடுத்த ஆட்டத்தில் ரஷ்யா 3-1 என எகிப்தை வென்றது. அடுத்து நடந்த சவுதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என உருகுவே வென்றது.

எகிப்து, சவுதி வெளியேற்றம் இதன் மூலம் தலா 2 வெற்றிகளைப் பெற்ற ரஷ்யா மற்றும் உருகுவே நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.

அதே நேரத்தில் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்த எகிப்து மற்றும் சவுதி அரேபியா பிரிவு சுற்றிலேயே வெளியேறின.

ஆறுதல் வெற்றி கிடைக்குமா இன்றைய ஆட்டத்தின் முடிவால், இரு அணிகளுக்கும் எந்தப் பலனும் இல்லை.

அதே நேரத்தில், இந்த உலகக் கோப்பையில் ஆறுதல் வெற்றியுடன் முடிக்க முடியும் என்ற நிலையில் களமிறங்கின.

மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான எகிப்தின் சலா இந்த ஆட்டத்திலாவது கோலடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

சலாவுக்கு முதல் கோல் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சவுதி அரேபியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் சலா கோலடித்தார். இந்த உலகக் கோப்பையில் அவர் அடித்த முதல் கோல் இதுவாகும்.

முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சவுதியின் சல்மான் அல் ஃபராஜ் கோடிக்க 1-1 என சமநிலை உருவானது.

ஆட்டத்தின் கடைசி விநாடியில் சலீம் அல் தாவ்சாரி கோலடிக்க 2-1 என சவுதி அரேபியா திரில் வெற்றியை பெற்றது. எகிப்து ஹாட்ரிக் தோல்வியைப் பெற்றது.

(தகவல் மூலம் – Mykhel Tamil)

(tamilnews football egypt defeated saudi arabia fifa world cup)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites