பிக் போஸ் நிகழ்ச்சி தற்பொழுது நடக்குமா நடக்காதா எனும் ஐயம் எல்லோர் மனதிலும் எழுகின்றது .
சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், விஜய் டிவிக்கு நான்கு நாட்கள் கெடு கொடுத்திருக்கிறார் பெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி. உண்மையில் என்ன தான் நடக்கின்றது (Big Boss Season two Banned Latest Gossip )
பிக் பாஸ் சீசன் ஒன்று நடக்கும் போதே இங்கேயிருக்கும் பெப்ஸி ஆட்களை வேலைக்கு பயன்படுத்தாமல் மும்பையிலிருந்து ஆட்களை இறக்குமதி செய்தது விஜய் தொலைக்காட்சி. ரகசியம் காப்பாற்றப்பட வேண்டும். அதுமட்டுமல்ல… நிறைய டெக்னிக் சமாச்சாரங்களை பின்பற்ற வேண்டியிருந்ததால் இங்கிருக்கும் தொழிலாளர்கள் வேண்டாம் என்று முடிவெடுத்தார்களாம். ஆனால் ‘அப்படி செய்வதை ஒப்புக் கொள்ள முடியாது. எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஐம்பது சதவீதம் பேரையாவது பயன்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டது பெப்ஸி நிர்வாகம். அதை கமல்ஹாசனும் ஒப்புக் கொண்டார்.
ஆனால் பிக் பாஸ் சீசன் 2 லும் பெப்ஸி ஆட்கள் பயன்படுத்தப்படவில்லை. இதனால் செட் ஆட்களை தவிர்த்து அங்கு வேலை பார்த்து வந்த தன் அமைப்பை சேர்ந்த டெக்னீஷியன்களை வேலை நிறுத்தம் செய்ய சொல்லி உத்தரவிடப் போகிறது பெப்ஸி. சுமார் 42 பேர் அவ்வாறு வேலை செய்து வருகிறார்களாம்.
இந்த விஷயம் கமல்ஹாசன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பெப்ஸி அமைப்பிலும் ஒரு உறுப்பினாராக இருக்கும் கமல், இந்த பிரச்சனையை தீர்க்கவில்லை என்றால், அவரையே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று உத்தரவு போடும் மன நிலையில் இருக்கிறது பெப்ஸி. ஒருவேளை உத்தரவை மீறினால், கமல் படங்களுக்கு ஒத்துழைப்பு இல்லை என்றும் அவர் மிரட்டப்படலாம்.
இதற்கிடையில் சின்னத்திரை சங்கத்தின் பொது செயலாளரான குஷ்பு, பெப்ஸி தலைவர் செல்வமணியை தொடர்பு கொண்டு இரண்டு பொறுங்க. நல்ல முடிவை ஏற்படுத்தித் தருகிறோம் என்று கூறியிருக்கிறாராம்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட சன்னி லியோன் : கலக்கத்தில் ரசிகர்கள்
சர்வதேச யோகா தினம் : நம்ம யோகா சுவாமி ராம் தேவ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் ….
டிவி நேரலையில் தொகுப்பாளினியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆசாமி
ஆண்களை சூடேற்ற ஜனனியும் ஐஸ்வர்யாவும் செய்த காரியம்! என்னடா நடக்குது?
சொந்த தம்பியை காதலித்து திருமணம் செய்த அக்கா
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamil.com
- Srilanka.tamilnews.com
- Tamilnews.com