சிரியாவுக்குள் நுழைந்த ஈராக் போர் விமானங்களால் 45 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

0
123
tamilnews iraq bombing Islamic Statemeeting 45killed inSyria

(tamilnews iraq bombing Islamic Statemeeting 45killed inSyria)

சிரியாவுக்குள் முகாமிட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தின் மீது ஈராக் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஈராக் ராணுவம் முற்றிலுமாக ஒடுக்கி நாட்டை விட்டு விரட்டியடித்துள்ளது.

ஆனால், அங்கிருந்து அயல் நாடான சிரியாவின் எல்லைப்பகுதிக்கு தப்பிச்சென்ற பயங்கரவாதிகள் அவ்வப்போது ஈராக் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

சிரியாவில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் அமெரிக்க விமானப் படையுடன் அயல் நாடான ஈராக்கின் விமானப் படைகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில், சிரியாவின் ஹாஜின் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆலோசனை கூட்டம் நடத்திய மூன்று வீடுகளின் மீது ஈராக் நாட்டு போர் விமானங்கள் நேற்றிரவு தீவிர தாக்குதல்களை நடத்தின.

இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் போர்த்துறை மந்திரி, ஊடகத்துறை தலைமை பொறுப்பாளர் உள்பட 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஈராக் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

(tamilnews iraq bombing Islamic Statemeeting 45killed inSyria)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites