டில்லியில் பட்டப்பகலில் ராணுவ தளபதியின் மனைவி கழுத்தறுத்து கொலை

0
712
tamilnews new delhi Army Major wife daytime killed

(tamilnews new delhi Army Major wife daytime killed)
புதுடில்லி கண்டோன்மென்ட் எல்லைக்கு உட்பட்ட வீதியில் இன்று மதியம் ராணுவ தளபதியின் மனைவி கழுத்தறுபட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கன்டோன்மெண்ட் எல்லைக்குட்பட்ட பிரார் சதுக்க வீதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மர்ம கொலை தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் இந்திய ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வரும் அதிகாரியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மதியம் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் பிசியோதெராபி சிகிச்சைக்காக சென்ற அரை மணி நேரத்தில் அவர் கொல்லப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக புதுடில்லி பொலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

(tamilnews new delhi Army Major wife daytime killed)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites