காசல்ரீ நீர்தேக்கத்தில் ஆணின் சடலம் மீட்பு

0
156
tamilnews kasaltree missing boy body found dead

(tamilnews kasaltree missing boy body found dead)

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இன்று (23) மதியம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்ட சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் அலூவெள்ள பிரதேசத்தில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கடந்த நான்கு தினங்களுக்கு முன் காணாமல் போய் உள்ளதாக பொலிஸாரக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் காணாமல் போனதாக கருதப்படும் இளைஞனுடையது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் எறியப்பட்டாரா என்பது தொடர்பாக பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரைணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(tamilnews kasaltree missing boy body found dead)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites