நெல்சன் மண்டேலா யாழ்ப்பாணத்தில் நினைவு கூறப்பட்டார்

0
319
100 anniversary Nelson Mandela leader Liberation jaffna

(100 anniversary Nelson Mandela leader Liberation jaffna)

விடுதலை போராட்ட வீரரும், தென்னாபிரிக்காவின் கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டேலாவின் 100 வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் (23) யாழ்ப்பாணம் பொது நூல் நிலையத்தில் மண்டேலாவின் நினைவு நாள் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகர் மார்க்ஸ் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது, யாழ்ப்பாணம் நூல் நிலையத்தின் நெல்சன் மண்டேலா கோர்ணரும் திறந்து வைக்கப்ப்பட்டது.

அத்துடன், உயர்ஸ்தானிகர் மார்கஸ்ஸினால் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை தொடர்பான புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் மாநகரசபை முதல்வரினால் உயர்ஸ்தானிகரிடம் நெல்சன் மண்டேலாவின் நினைவு திருவுருவ படமும் ஞாபகார்த்தமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இறுதியில் தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகராலயத்தினால் நெல்சன் மண்டேலாவின் அவரது வாழ்க்கை தொடர்பான திரைப்படம் ஒன்றும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

(100 anniversary Nelson Mandela leader Liberation jaffna)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites