ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கான காரணம் இதுதான்..!

0
316
gnanasara thero release reason

ஆறு மாதங்கள் அனுவிக்கும் வகையில் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று ஹோமகம நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.(gnanasara thero release reason)

சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ஞானசார தேரர் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த நிலையில் அவர் ஹோமகம நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் தரப்பில், ஞானசார தேரருக்கு பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை. இதன் காரணமாகவே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்த நீதிவான், ஞானசார தேரரின் முடக்குமாறும் உத்தரவிட்டதுடன், அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

வெள்ளை விரிப்பு விரிக்கப்பட்டு மலர் தூவி வரவேற்பு..
ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் நீதிமன்ற வளாகத்திற்கருகில் உள்ள விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெள்ளை விரிப்பு விரிக்கப்பட்டு மலர் தூவி பொதுபல சேனா அமைப்பைச் சேர்ந்த தேரர்களாலும் அவ்வமைப்பின் ஆதரவாளர்களாலும் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

tags :- gnanasara thero release reason

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites