இரட்டை குடியுரிமை பெற்றுக்கொள்ள அதிக விண்ணப்பங்கள்

0
121

இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொள்ள புலம் பெயர் இலங்கையர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க கூறினார். (double citizen most Lankan people like immigration emigration)

இதற்காக ஒரு மாதத்துக்கு சுமார் 1000 விண்ணப்பங்கள் வரை கிடைப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுவினால் இவை பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் விண்ணப்பதாரிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 800 பேருக்கு எதிர்வரும் ஜூலை முதல் வாரத்தில் இரட்டைக் குடியுரிமை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்போருக்கான கட்டணம் 3 இலட்சம் ரூபா என்பதுடன், அவர்களின் மனைவி பிள்ளைகளுக்கான கட்டணம் 50,000 ரூபாய் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

tags :- double citizen most Lankan people like immigration emigration

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites