அஞ்சல் பணியாளர்களின் இரு கோரிக்கைகளுக்கு இணக்கம்

0
82
postal staff request accept movement minister haleem latest news

அஞ்சல் பணியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (postal staff request accept movement minister haleem latest news)

அஞ்சல் மற்றும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.

சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அமைய, தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அஞ்சல் பணியாளர்களின் இரண்டு பிரதான கோரிக்கைகளுக்கு இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர்கள் அதனை உடனடியாக அமுல்ப்படுத்துமாறு கோருகின்றனர்.

ஆனால், எந்தவொரு நிறுவனமும் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டால், அதனை அப்போதிலிருந்தே அமுல்ப்படுத்த முடியாது என அஞ்சல் சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவற்றில் நடைமுறை ரீதியான விடயங்கள் உள்ளன.

சம்பள நிர்ணய ஆணைக்குழு செவ்வாய்கிழமைதான் கூடி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும்.

இதையடுத்து, அந்தத் தீர்மானத்தை அமைச்சரவையில் சமர்பிக்க வேண்டும்.

எனவே, அஞ்சல் தொழிற்சங்கங்கள் அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை என அஞ்சல் மற்றும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.

tags :- postal staff request accept movement minister haleem latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites