‘காவலரை என் மகள் தாக்கவில்லை’ – டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்த ஏ.டி.ஜி.பி!

0
191
omplaint daughter Artillery indiatamilnews indianews

omplaint daughter Artillery indiatamilnews indianews

“தனது மகள் ஆர்டலியை தாக்கவில்லை” என ஏ.டி.ஜி.பி. சுதேஷ்குமார் டி.ஜி.பி. லோக்நாத் பெகராவிடம் மனு அளித்துள்ளார்.

கேரள மாநில பெட்டாலியன் ஏ.டி.ஜி.பி-யாக இருந்தவர் சுதேஷ்குமார். திருவனந்தபுரம் பூங்காவில் நடைப்பயிற்சிக்கு ஏ.டி.ஜி.பி மகள் சென்றிருக்கிறார்.

அவரை அழைத்து வர காலதாமதமாகச் சென்ற காவலர் கவாஸ்கரை ஏ.டி.ஜி.பி-யின் மகள் தாக்கிய சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, உயர் போலீஸ் அதிகாரிகளின் வீட்டு வேலை செய்வதற்காக காவலர்களைப் பயன்படுத்துவதாகவும், அதிகாரிகள் வீட்டு நாயை பராமரிக்கும் பணியைக்கூட காவலர்கள் செய்துவந்ததாகவும் பல புகார்கள் கிளம்பின.

இதையடுத்து ஏ.சி.ஜி.பி சுதேஷ்குமாரின் பெட்டாலியன் பதவி காலியானது. கேரளாவில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். கவாஸ்கர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஏ.டி.ஜி.பி சுதேஷ்குமார் கேரள மாநில டி.ஜி.பி லோக்நாத் பெகராவிடம் ஒரு மனு அளித்துள்ளார். அதில், தனது மகள் காவலரைத் தாக்கவில்லை எனவும், அலட்சியமாக கார் ஓட்டியதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

omplaint daughter Artillery indiatamilnews indianews

More Tamil News

போதும் என்னை விட்டுவிடுங்கள்! – நடிகை கஸ்தூரி வீடியோ!

கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா? – ஸ்டெர்லைட் ஆலை!

பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?

கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!

​​​15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பரிசு – மிசோரமில் அறிவிப்பு!

Tamil News Group websites :

Technotamil.com

Tamilhealth.com

Sothidam.com

Cinemaulagam.com

Ulagam.com

Tamilgossip.com