யாழில். பேய் இல்லையாம்; சுகாதார அதிகாரிகள் தகவல்

0
384
not ghost Jaffna

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பிரதேசங்களிலுள்ள வீதிகளில் ஆவிகள் தென்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. (not ghost Jaffna)

வெண் நிற ஆடைகள் அணிந்து, ஒரு கையில் இரத்தம் வடியும் கருப்பு நிறக் கோழியும், மற்றைய கையில் இருந்து இரத்தம் வடிவது போன்று காட்சியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த ஆவி சாதாரண மனிதர்களை விட உயரமாக உள்ளதாகவும் இதனை நேர்ல் கண்ட மக்கள் கூறியதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்னர் ஆவிகள் வீடுகளில் இருப்பதை மக்கள் அவதானித்துள்ளதோடு, தற்போது இந்த ஆவிகள் இரவு நேரங்களில் வீதிகளில் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், இந்தச் செய்தியை பிரசுரித்த ஊடக நிறுவனங்களை சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுபோன்ற பேய், பிசாசுகள் என ஒன்றும் இல்லை எனவும், மக்களை வீணாக பயமுறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகங்கள் அங்கு நடமாடும் பேயின் புதிய புகைப்படங்கள் வெளியிட்டுள்ளதனால் சுகாதார அதிகாரிகள் ஊடகங்களுக்கு கொடுத்த அழுத்தத்தை குறைத்துள்ளனர்.

என்றாலும், மக்கள் கொண்ட அச்சத்தை நீக்க எவருவருக்கும் முடியவில்லை என்றும் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

tags :- not ghost Jaffna

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites