சிறுத்தைகளின் நடமாட்டம்; வீட்டிற்குள் முடங்கியிருக்கும் தோட்டத் தொழிலாளர்கள்

0
146
Leopard fear Plantation workers

ஹட்டன் டிக்கோயா வனராஜா கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டத்தின் காரணமாக தேயிலை மலையில் தொழில் செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை எற்படுத்தியுள்ளது. (Leopard fear Plantation workers)

தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் இந்தத் தோட்டத்தில் உள்ள தேயிலை செடி அடிவாரத்திலும், டிக்கோயா வனராஜா தமிழ் வித்தியாலயத்தின் வளாகப் பகுதியிலும் பதுங்கி இருக்கின்றன.

அத்துடன், இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தோட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது.

அத்துடன், லயன் குடியிருப்பு பகுதிகளுக்கும் சிறுத்தைகள் வந்து சென்றுள்ளதாகவும், காவலுக்காக வளர்க்கப்படுகின்ற நாய்களையும் இந்தச் சிறுத்தைகள் வேட்டையாடி உண்பதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த பாடசாலை வளாகப் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை அவதானித்த அதிபர், ஹட்டன் பொலிஸாருக்கும், நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கும் பலமுறை அறிவித்துள்ளார்.

எனினும் இதுவரை எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

tags :- Leopard fear Plantation workers

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை