மகளை கர்ப்பிணியாக்கி குடும்பம் நடத்திய கொடூர தந்தை; குருநாகலில் சம்பவம்

0
146
Father sexually abused daughter

பாடசாலை மாணவியான 14 வயதுடைய தனது ஒரேயொரு மகளை ஐந்து மாதக் கர்ப்பிணியாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். (Father sexually abused daughter)

தனது மகளை அச்சுறுத்தி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, பின்னர் வெகு நாட்களாக இரகசியமாக கணவன், மனைவி போன்று வாழ்ந்தும் வந்துள்ளார்.

இந்த கொடூரமான தந்தையை கைதுசெய்த பொலிஸார், குருநாகல் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் ஜுலை மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குருநாகல், மாஸ்பொதை, குடாகல்கமுவ பிரதேசவாசியான சந்தேக நபரை குருநாகல் பொலிஸ் தலைமையகத்தின் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்தனர்.

இந்தச் சம்பவத்தை தாயிடம் கூறினால் கொன்றுவிடுவேன் என பயமுறுத்தி தனது மகளுடன் சந்தேக நபர் பாலியல் உறவு கொண்டுள்ளார்.

இதற்கிடையில் குறித்த சிறுமியின் தாயாரும் வெளிநாடு சென்ற நிலையில், வீட்டில் இருந்த பாட்டி, சிறுமியின் வயிறு பெரிதாக இருப்பதையும், அவளின் நடமாட்டத்தின் மீதும் சந்தேகம் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் குருநாகல் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். தற்பொழுது குறித்த சிறுமி அவரின் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

tags :- Father sexually abused daughter

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை