ஞானசார தேரரை விடுவிக்க வலியுறுத்தி ஹட்டனில் எதிர்ப்பு ஊர்வலம்

0
137
Protest rally Hatton emphasize release Gnanasara Thera

கைதுசெய்யப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி, இன்று மதியம் 3 மணியளவில் ஹட்டனில் அமைதியான முறையில் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (Protest rally Hatton emphasize release Gnanasara Thera)

ஹட்டன் நீக்ரோதாரம விகாரையின் பிக்குமார்களும், ஹட்டன் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து குறித்த எதிர்ப்பு ஊர்வலத்தை மேற்கொண்டிருந்தனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரை விடுவிக்குமாறு வலியுறுத்தியே இந்த எதிர்ப்பு ஊர்வலம் இன்று ஹட்டனில் இடம்பெற்றது.

ஹட்டன் நீக்ரோதாரம விகாரையின் விகாராதிபதிகளில் ஒருவரான ஒமந்தே தீராநந்த தேரரின் ஏற்பாட்டில் பிக்குமார்கள் மற்றும் ஹட்டன் பிரதேச மக்கள் மலர் தட்டுக்களை ஏந்திய வண்ணம் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இருந்து ஹட்டன் நீக்ரோதாரம விகாரைக்கு ஊர்வலமாகச் சென்று, விகாரையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

tags :- Protest rally Hatton emphasize release Gnanasara Thera

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை