பிபா உலகக்கிண்ணத் தொடரின் இன்றைய பி குழுவுக்கான இரண்டாவது போட்டியில் போர்த்துகல் மற்றும் மொராக்கோ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஸ்பெயின் அணிக்கெதிராக விளையாடிய முதல் போட்டியை போர்த்துகல் அணி ரொனால்டோவின் ஹெட்ரிக் கோல்களின் உதவியுடன் ஒருவழியாக 3-3 என சமப்படுத்தியது. எனினும் மொராக்கொ அணி தங்களது முதல் போட்டியில் ஈராக்கிடம் 1-0 என வீழ்ந்து பலவீனமான நிலையில் உள்ளது.
உலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இன்றைய போட்டியின் வெற்றி இரண்டு அணிகளுக்கும் அவசியம்.
மொராக்கோ மற்றும் போர்த்துகல் அணி உலகக்கிண்ண வரலாற்றில் ஒரே ஒரு தடவை நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளன.
1986ம் ஆண்டு நடைபெற்ற இந்த போட்டியில் மொராக்கோ அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. இந்த வெற்றியானது மொராக்கோ அணியின் முதல் வெற்றியாகவும் பதிவாகியிருந்தது.
இதன்பின்னர் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டிகளில் போர்த்துகல் அணி, ஆபிரிக்க அணியொன்றுடன் தோல்வியை பெற்றிருக்கவில்லை. குறித்த காலப்பகுதியில் 5 போட்டிகளில் ஆபிரிக்க அணிகளை எதிர்கொண்ட போர்த்துகல் அணி இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளதுடன், ஒரு போட்டியை சமப்படுத்தியுள்ளது.
அதுமாத்திரமின்றி போர்த்துகல் அணி 2002ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத்துக்கு பின்னர் ஐரோப்பிய நாடுகளை சேராத அணியுடன் தோல்வியடைந்ததில்லை. அதுமாத்திரமின்றி இறுதியாக மோதிய 10 உலகக்கிண்ண குழுநிலை போட்டிகளில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற ஜேர்மனி அணிக்கெதிரான போட்டியில் மாத்திரமே தோல்வியடைந்துள்ளது.
இதன்படி பார்க்கும் போது வரலாற்று சாதனைகளின் அடிப்படையில் போர்த்துகல் அணிக்கு இன்றைய போட்டியின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
எனினும் இம்முறை நடைபெற்று வரும் போட்டிகளில் எதிர்பாராத முடிவுகள் கிடைக்கப்பெற்று வருவதால், இறுதிவரை போட்டிகளின் வெற்றிகளை கணிக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இன்றைய போட்டியின் 58 சதவீத வெற்றிவாய்ப்பு போர்த்துகலுக்கும், மொராக்கோவின் வெற்றிவாய்ப்பு 16 சதவீதமும் உள்ள நிலையில், போட்டி சமனிலையாவதற்கு 26 வீத வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>
- உச்சகட்ட சோதனைக்கு ஆளாக்கப்பட்ட அவுஸ்திரேலியா!!! : ஏன் தெரியுமா?
- சதத்தை தவறவிட்ட குசால் மெண்டிஸ்! : பலமான நிலையில் இலங்கை!!!
- சந்திமால் உண்மையில் பந்தை சேதப்படுத்தினாரா? : வெளியாகிய முக்கிய தகவல்!!!
- இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் ராயுடு!!!
- மோசமான சாதனையை சொந்தமாக்கிய பிரபல அணிகள்!!!
- பந்தை சேதப்படுத்தி சிக்கிக்கொண்ட சந்திமால்… : ஐசிசியின் அதிரடி நடவடிக்கை!!!
<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>
portugal vs Morocco fifa world cup 2018 news Tamil, portugal vs Morocco fifa world cup 2018 news Tamil, portugal vs Morocco fifa world cup 2018 news Tamil