தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையே இனவாதத்தை விதைக்க வேண்டாம்

0
223
Kavindran Kodeeswaran comment Conflict Tamil Muslims

தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையே இனவாதத்தை விதைக்க வேண்டாம் என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். (Kavindran Kodeeswaran comment Conflict Tamil Muslims)

இந்தப் பிரச்சினையை சில அரசியல்வாதிகள் தமது அரசியல் இலாபத்துக்காக தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினையாக மாற்ற முற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு, பெரியகளப்பு காணிப் பிரச்சினை தொடர்பில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெரியகளப்பு பிரதேசத்தில் வேலியிட முற்பட்ட முஸ்லிம்கள் சிலரை தமிழர்கள் தாக்கியதாக சில அரசியல்வாதிகளின் முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்கருத்து முற்றிலும் தவறானது. முஸ்லிம்கள் மாத்திரமல்ல களப்பில் வேலியிடும் அனைவரையும் தற்போது பொதுமக்கள் தடுத்து வருகின்றனர்.

ஆலையடிவேம்பு, பெரியகளப்பு பிரதேசம் நீரியல்வள திணைக்களத்துக்குரியது என அத்திணைக்களம் அண்மையில் பகிரங்க பெயர்ப்பலகையை நாட்டியது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் களப்பு பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறு பல்வேறு அமைப்புக்களும் போராட்டத்தில் ஈடுபட்டன.

அப்போராட்டமானது களப்பை ஆக்கிரமித்துள்ள தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு எதிரானதே தவிர தனியே முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல என்பது அனைவரும் அறிந்த விடயம்.

எனவே இவ்வாறான வீண் வார்த்தைகளை பரப்பி மக்களை குழப்ப வேண்டாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

tags :- Kavindran Kodeeswaran comment Conflict Tamil Muslims

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites