யுத்தத்திற்கு பின் முதல்முறையாக யாழிற்கு விஜயம் செய்யும் நோர்வே உயர்மட்ட அமைச்சர்

0
472

இலங்கையில் இடம்பெற்ற யுத்த முடிவுக்கு பின்னர் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர் ஒருவர் முதல்முறையாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். (Norwegian Foreign Minister Jens Frolich Holte visited Jaffna)

நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் இன்று தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மூத்த அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை, நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் மேற்கொள்ளுவார் என்றும் மீள்குடியேற்றப் பகுதிகளில் நிலையான வாழ்வாதார செயற்பாடுகளுக்காக நோர்வே அளிக்கும் உதவிகளின் பெறுபேறுகள் குறித்தும் அவர் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மரக்கறி மற்றும் பழங்கள் பொதியிடும் மையத்தையும் திறந்து வைக்கவுள்ளதாகவும் குருநகரில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளிலும் நோர்வே இராஜாங்க அமைச்சர் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :- Norwegian Foreign Minister Jens Frolich Holte visited Jaffna

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites