இன்றைய ராசி பலன் 19-06-2018

0
922
Today Horoscope 19-06-2018

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 5ம் தேதி, ஷவ்வால் 4ம் தேதி,
19.6.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி மதியம் 12:21 வரை;
அதன் பின் சப்தமி திதி, மகம் நட்சத்திரம் காலை 8:12 மணி வரை;
அதன் பின் பூரம் நட்சத்திரம், சித்தயோகம்.(Today Horoscope 19-06-2018 )

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : திருவோணம்
பொது : சஷ்டி விரதம், முருகன், துர்க்கை வழிபாடு.

மேஷம்:

பெற்றோர் ஆலோசனையை ஏற்பது அவசியம். திட்டமிட்ட பணிகளை கூடுதல் அக்கறையுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் சீரான லாபம் கிடைக்கும். உறவினர் வகையில் செலவு ஏற்படலாம். அரசாங்க வகையில் ஓரளவு நன்மை உண்டு.

ரிஷபம்:

சிலரது பேச்சு சங்கடப்படுத்தலாம். யாருக்கும் தேவையற்ற வாக்குறுதி தர வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உடல் நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம்.

மிதுனம்:

பொது இடங்களில் கவனமுடன் பேசவும். தொழில், வியாபார நடைமுறையில் குறுக்கீடு வந்து சரியாகும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். நண்பரால் உதவி கிடைக்கும்.

கடகம்:

பலர் வியக்கும் வகையில் முன்னேறுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமான அளவில் இருக்கும். உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். குடும்பத்தினர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

சிம்மம்:

எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற்று தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். மாணவர்கள் நல்ல தேர்ச்சி வெறுவர்.

கன்னி:

எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். உணவுப் பொருள் தரமறிந்து உண்பது நல்லது.

துலாம்:

உற்சாகமுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு வந்து பின்னர் சரியாகும். மிதமான பணவரவு கிடைக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள். தியானம், இஷ்ட தெய்வ வழிபாடு மன நிம்மதிக்கு உதவும்.

விருச்சிகம்:

உற்சாகமும் கலையுணர்வும் அதிகரிக்கும். அனைவரிடமும் அன்பு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி திருப்திகரமாக நிறைவேறும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். பெற்றோரின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.

தனுசு:

தேவையற்ற கருத்துக்களை பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வதில் தாமதம் இருக்கும். புதிய வழிகளில் செலவு அதிகரிக்கலாம். சீரான ஓய்வு பின்பற்றுவதால் உடல் ஆரோக்கியம் பெறும்.

கும்பம்:

முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும். தாய்வழி உறவினரால் பண உதவி கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பதால் மனதில் அமைதி உண்டாகும்.

மகரம்:

குடும்ப உறுப்பினர் அதிக பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரம் செழிக்க தக்க நடைமுறையை பின்பற்றவும். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சன்மானம் கிடைக்கும்.

மீனம்:

உற்சாகம் நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். வெகுநாள் திட்டமிட்ட நற்செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனம் செய்வீர்கள். நண்பர்களால் உதவி உண்டு. அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

அமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் குணாதிசயங்கள் தவறானதாக இருக்குமா ??

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today Horoscope 19-06-2018