மக்ரோனின் அடுத்த சுற்று பயணம் வத்திகானுக்கு- போப் ஆண்டவருடன் சந்திப்பு!

0
550
France president visit Vatican- meet pope

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இம்மாதம் போப் ஆண்டவரை சந்திப்பதற்காக வத்திக்கான் நகருக்கு பயணமாகின்றார். France president visit Vatican- meet pope

இம்மானுவல் மக்ரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர், இதுவே முதன் முறையாக போப் ஆண்டவரை சந்திக்க உள்ளார். எதிர்வரும் ஜூன் 26 ஆம் திகதி இவர் வத்திக்கான் பயணமாக உள்ளார்.

மக்ரோன் அகதிகள் குறித்தும், சுற்றுச்சூழல் மற்றும் ஐரோப்பாவின் வளர்ச்சி குறித்தும் போப் ஆண்டவருடன் உரையாட உள்ளதாக அறியமுடிகிறது. அத்துடன், போப் ஆண்டவரை பிரான்ஸுக்கு வரவும் அழைப்பு விடுக்க உள்ளதாக எலிசே மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போப் ஆண்டவர் பிரான்ஸின் மார்செ நகருக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவும், அதற்கான திகதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்கு முன்னதாக, மக்ரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போது, போப் ஆண்டவர் தனது வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**