பி.டி.பியுடன் கூட்டணியை முறித்துக்கொண்டது பா.ஜ.க!

0
327
BJP party breaks coalition PDP party

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை பாரதிய ஜனதா கட்சி வாபஸ் பெற்றுள்ளது. கூட்டணி முறிவு தொடர்பான அறிவிப்பை பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் வெளியிட்டார். பிடிபி கட்சிக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதால் ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.BJP party breaks coalition PDP party

இந்நிலையில் 87 எம்.எல்.ஏக்கள் கொண்ட காஷ்மீர் பேரவையில் பாஜகவுக்கு 25, பிடிபி கட்சிக்கு 28 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பிடிபி கட்சிக்கு 44 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.

மேலும் அண்மைக்காலமாக காஷ்மீரில் நிலவும் சூழல் காரணமாக இரு கட்சிகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. பயங்கரவாதம், வன்முறை, பத்திரிகையாளர் சுடப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகள் கூட்டணியை பாதித்தன. கூட்டணி முறிவு குறித்து ராம் மாதவ் கூறுகையில், “காஷ்மீரில் அமைதி நிலவவே பிடிபியுடன் கூட்டணி வைத்தோம்; ஆனால் அது நடக்கவில்லை” என்றார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :