அக்கரைப்பற்றில் துண்டுப்பிரசுரம் : முஸ்லிம்களுக்கு விடுக்கும் அவசர கோரிக்கை

0
294
akkaraipattu muslim attack notice

அக்கரைப்பற்று முஸ்லிம்கள் மீது இனவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்போம் எனும் தலைப்பில் அக்கறைப்பற்றில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.(akkaraipattu muslim attack notice)

தமிழர்களை, முஸ்லிம்கள் வேலைக்கு அமர்த்த வேண்டாம் எனவும் அந்த துண்டுப் பிரசுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த துண்டு பிரசுரம் பின்வருமாறு,

அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்ற முஸ்லிம்கள் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் தூண்டுதலில் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கறுப்புத் துணியால் முகத்தை மூடிக்கொண்டு வந்து திட்டமிட்ட வகையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

tags :- akkaraipattu muslim attack notice

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites