அமெரிக்க விபச்சார வழக்கில் சிக்கி அசௌகரியப்பட்ட நடிகை..!

0
52
Mehreen Pirzada questioned US authorities,Mehreen Pirzada questioned US,Mehreen Pirzada questioned,Mehreen Pirzada,Mehreen
Photo Credit : Google Image

தெலுங்கு, கன்னட நடிகைகளை கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருமாறு அழைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.(Mehreen Pirzada questioned US authorities)

சிக்காகோவில் வசித்து வந்தவரும் தெலுங்கு படங்களை தயாரித்தவருமான கிஷன் மற்றும் அவரின் மனைவி சந்திரா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு படங்களில் நடித்து வரும் மெஹ்ரீன் பிர்சாதா கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். கனடாவில் நடந்த தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிறகு தனது குடும்பத்தாரை சந்திக்க அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்க விமான நிலையத்தில் மெஹ்ரீன் தான் ஒரு நடிகை அதுவும் தெலுங்கு நடிகை என்று கூறியதும் குடியேற்றத் துறை அதிகாரிகள் அவரிடம் 30 நிமிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதாவது, விபச்சார வழக்கில் கிஷன் கைதான பிறகு தெலுங்கு நடிகைகள் அமெரிக்கா வந்தாலே விசாரணை நடத்தப்படுகிறதாம்.

மேலும், ”நான் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருப்பதால் எனக்கு நடந்த விஷயம் தெரியாது. நான் ஒரு நடிகை அதுவும் தெலுங்கு நடிகை என்றதுமே 30 நிமிடம் விசாரணை நடத்தினார்கள். எனக்கு அதிர்ச்சியாகவும், அசிங்கமாகவும் இருந்தது” என்கிறார் மெஹ்ரீன்.

மேலும், ”நடிகைகள் அமெரிக்காவுக்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். அதனால் தான் அமெரிக்காவுக்கு வரும் அனைத்து தெலுங்கு நடிகைகளிடமும் விசாரணை நடத்துவதாகவும் அவர்கள் கூறினார்கள். அதுமட்டுமல்லாமல், அசௌகரியத்திற்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டனர்” என்று மெஹ்ரீன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் நோட்டா படம் மூலம் அர்ஜுன் ரெட்டி படம் புகழ் விஜய் தேவரகொண்டா கோலிவுட் வந்துள்ளார். அந்த படத்தின் ஹீரோயின் மெஹ்ரீன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

<MOST RELATED CINEMA NEWS>>

பிறந்ததின நாளில் விஜய்யின் 30 படங்கள் வெளியீடு : குதூகலிக்கும் தளபதி ரசிகர்கள்..!

பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் : அதிர்ச்சித் தகவல்..!

எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா வீட்டில் டும் டும் டும் : காதல் திருமணமாம்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் முழு விபரம்..!

கவர்ச்சி நடிகைகளை களமிறக்கிய கமல்ஹாசன் : சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஹவுஸ்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 2 : வீட்டுக்குள் முதலாவதாக நுழைந்த செல்லக்குட்டி ஓவியா..!

Tags :-Mehreen Pirzada questioned US authorities

Our Other Sites News :-

அமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் குணாதிசயங்கள் தவறானதாக இருக்குமா ??