இராணுவ வாகனம் மோதியதில் தகப்பனும் மகளும் படுகாயம்!

0
704
father daughter injured military vehicle collided

யாழ்.தென்மராட்சி மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற இராணுவ வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும், மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(father daughter injured military vehicle collided)

குறித்த சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை(15) பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

தந்தையும் மகளும் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த போது மட்டுவில் கனகம்புளியடிச் சந்தியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கிய 17 வயதான மாணவி சுயநினைவிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது தந்தையார் தலை மற்றும் காற்பகுதிகளில் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

tags :- father daughter injured military vehicle collided

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites