யாழில் 16 வயது சிறுமி 08 மாத கர்ப்பிணியாகிய சம்பவம்; ஒருவர் கைது!

0
1487
Jaffna arrested 16 year old girl 08-month pregnant

யாழ் – தென்மராட்சி பகுதியில் சிறுமியொருவரை கர்ப்பிணியாகியுள்ளார்.என்ற
சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (Jaffna arrested 16 year old girl 08-month pregnant)

குறித்த நபரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் 30 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் – கொடிகாமம், குடமியன் பகுதியில் வசிக்கும் 16 வயதான சிறுமி ஒருவர், எட்டு மாத கர்ப்பிணியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- Jaffna arrested 16 year old girl 08-month pregnant

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites