பிரான்ஸிலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்!

0
256
farmers protesting blockade fuel refinery

பிரான்ஸில் பாமாயில் இறக்குமதிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை நடத்தினர். farmers protesting blockade fuel refinery

பாமாயில் இறக்குமதிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்குச் செல்லும் சாலைகளை மறித்து விவசாயிகள் நேற்று Marseille பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரான்ஸில் தாவர எண்ணெயைப் பயன்படுத்தி எரிபொருள் தயாரிக்கவும், வெளிநாடுகளில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்யவும் டோட்டல் என்கிற எண்ணெய் நிறுவனத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடுவோருக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெனிவில்லியர்ஸ், லா மேடு ஆகிய இடங்களில் உள்ள எண்ணெய்க் கிடங்குகளையும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

ஆலைகளுக்குச் செல்லும் சாலைகளில் பெருமளவு மண், மரத் துண்டுகள், வைக்கோல் ஆகியவற்றைக் குவித்துத் தடைகளை ஏற்படுத்தினர். இதனால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**