இன்றைய ராசி பலன் 12-06-2018

0
565
Today Horoscope 12-06-2018

இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 29ம் தேதி, ரம்ஜான் 27ம் தேதி,
12.6.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி காலை 6:03 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி அதிகாலை 4:06 வரை; கார்த்திகை நட்சத்திரம் மாலை 6:30 வரை;
அதன்பின் ரோகிணி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today Horoscope 12-06-2018 )

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
பொது : மாதசிவராத்திரி, கார்த்திகை விரதம், முருகன், சிவன் வழிபாடு

மேஷம் :

எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய அணுகுமுறை பின்பற்றவும். மிதமான வருமானம் இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது. பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்வது கூடாது

ரிஷபம்:

எதிர்கால வாழ்வு குறித்த நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு இருக்கும். சுபவிஷய பேச்சில் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

மிதுனம்:

புத்துணர்வுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் வந்து சேரும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டாகும். பெண்களால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

கடகம்:

திடீர் பொறுப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான வருமானம் இருக்கும். தொழிலுக்கான கடன் வாங்க நேரிடலாம். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். பிள்ளைகள் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர்.

சிம்மம்:

நல்லோரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள நிலுவைப் பணிகளை உடனே நிறைவேற்றுவது அவசியம். குடும்பத்திற்கான பணத்தேவை அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

 

கன்னி:

எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி எளிதாக நிறைவேறும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினரால் உதவி உண்டு.

துலாம்:

வழக்கத்திற்கான மாறான பணி உருவாகி தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணவரவு சுமாராக இருக்கும். நகை, பணம் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம்.

விருச்சிகம்:

நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை இலகுவாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். ஆதாயம் உயரும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர்.

தனுசு:

பொது விவகாரத்தில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. கூடுதல் உழைப்பின் மூலம் தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்கலாம். அளவான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும்.

மகரம்:

சான்றோர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர்.அரசியல்வாதிகளுக்கு இருந்த மறைமுகப் போட்டி குறையும்.

கும்பம்:

கடந்த கால உழைப்பிற்கான நற்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமிதம் அளிக்கும்.

மீனம்:

யாரிடமும் வீண் விவாதம் வேண்டாம். மன அமைதியை பாதுகாப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும். பணவரவு சுமாராக இருக்கும். குழந்தைகளின் நற்செயல் மனதிற்கு ஆறுதல் அளிக்கும்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

 

Keyword:Today Horoscope 12-06-2018