சட்டசபையிலிருந்து  எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்

0
183
Congress MLA criticized Speaker Dhanapal Assembly expelled assembly

Congress MLA criticized Speaker Dhanapal Assembly expelled assembly

சட்டசபையில் சபாநாயகர் தனபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

சட்டசபையில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து விஜயதரணி சபாநாயகருடன் மோதலில் ஈடுபட்டதால் அவரை வெளியேற்ற சபை காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பெண் காவலர்கள் விஜயதரணியை கையைப் பிடித்து வெளியே அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். அவர் வெளியேற மறுத்ததால் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.

பின்னர் விஜயதரணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சட்டசபையில் கன்னியாகுமரி மாவட்ட பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டேன். நேற்றும் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். ஆனால் எனக்கு பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். தொடர்ந்து நான் வற்புறுத்தியதால் சபை காவலர்களை கொண்டு வெளியேற்றினார்.

சபை காவலர்கள் என்னை அநாகரீகமான முறையில் காயப்படுத்தி வெளியேற்றினார்கள். சேலையைப் பிடித்தும், கையைப் பிடித்து இழுத்தும் வயிற்றை அமுக்கியும் வெளியேற்றினார்கள். சட்டசபையில் சபாநாயகரும் அநாகரீகமான முறையில் பேசினார் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விஜயதரணி வெளியேற்றப்பட்டதை கண்டித்து மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

Congress MLA criticized Speaker Dhanapal Assembly expelled assembly

Tags; neet exam india gvr

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*குழந்தைகளுக்காக “நல்லெண்ண தூதுவர் நடிகை திரிஷா” விழிப்புணர்வு பேரணி!

*இறந்த பிணத்தை புதைக்காமல் வைத்து காத்திருந்த குடும்பம்!!

*மட்டன் சமைத்துத்தராததால் மனைவியை கொலை செய்த கணவன்!

*கணவன் தலையில் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி!

*சித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த காவல்துறை அதிகாரி!

*மெரினா கடலில் குளிக்க சென்ற மாணவர்களுக்கு நடந்த விபரீதம்! இவர்களுக்கு நடந்தது என்ன??

*முகத்தைச் சிதைத்து கொலை செய்தேன்! – கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்!

*அடிதடியில் ஜெயித்தது! – மாமியாரா? மருமகளா?

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com