மே.தீவுகளுக்கெதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் முன்னணி வீரர்!!!

0
211
Sri Lanka vs West Indies 2nd test news Tamil

மே.தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 226 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

453 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின், குசால் மெண்டிஸை தவிர ஏனைய துடு்ப்பாட்ட வீரர்கள், மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில், தனஞ்சய டி சில்வாவை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவாதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தனஞ்சய டி சில்வா இந்திய அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியதுடன், இலங்கை அணியை தோல்விலிருந்து மீட்டார்.

எனினும் தந்தையின் மறைவு காரணமாக தனஞ்சய டி சில்வா மே.தீவுகளுக்கு தாமதமாக புறப்பட்டார். அத்துடன் அவரது மனநிலை சரியாக இருக்கின்றதா? என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது.

தனஞ்சயவை அடுத்த போட்டியில் இணைப்பது குறித்து இலங்கை அணியின் தலைவர் சந்திமால் நேற்றைய போட்டியின் நிறைவில் கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் குறிப்பிடுகையில்,

“நாம் இந்த போட்டியில் களத்தடுப்பில் மோசமாக செயற்பட்டிருந்தோம். பிடியெடுப்புகளை தவறவிட்டமை எமக்கு அதிக பின்னடைவை ஏற்படுத்தியது. துடுப்பாட்டமும் அப்படிதான். குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதேவேளை தனஞ்சய டி சில்வா அணியின் மூன்றாவது இலக்க துடுப்பாட்ட வீரராக சிறப்பாக செயற்பட்டு வந்தார். அவர் மன ரீதியில் தகுதிபெற்றிருந்தால் அடுத்த போட்டியில் இணைக்கப்பதற்கு முயற்சிப்போம். ஆனால் பொருத்திருந்ததுதான் பார்க்கவேண்டும்” என தெரிவித்தார்.

<<Tamil News Group websites>>

Sri Lanka vs West Indies 2nd test news Tamil, Sri Lanka vs West Indies 2nd test news Tamil