“புது யுகத்தை நோக்கி ஒன்ராறியோ”: டக் ஃபோர்ட்

0
570
Ontario Election Dough Ford

ஒன்ராறியோ புது யுகத்தை நோக்கிய பயணத்திற்கு தயாராகி விட்டது என்ற தெளிவான செய்தியை இந்த தேர்தல் சொல்லியுள்ளதாக ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். Ontario Election Dough Ford

ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, நேற்று இரவு ரொரன்ரோ மாநாட்டு மண்டபத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், செழுமைக்குமான தொடக்கம் இது எனவும், இதனை ஒன்ராறியோ மக்கள் இதுவரை கண்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தின் நம்பிக்கைக்கும், செழிப்புக்குமான தெளிவான செய்தியை மக்கள் இந்த தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர் எனவும், மக்களுக்காக செயற்படும் அரசினை அமைக்க அவர்கள் ஆணையளித்துள்ள நிலையில், அதுவே தமது அரசின் இலக்காகவும் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதுவரை ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி இந்த தேர்தலில் பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளதுடன், Don Valley West தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் கத்திலின் வின், 200 வாக்குகள் எனப்படும் மிகக்குறுகிய வித்தியாசத்தில் தனது ஆசனத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

உத்தியோகபூர்வமான வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பழமைவாதக் கட்சி 76 ஆசனங்களையும், புதிய சனநாயக கட்சி 40 ஆசனங்களையும், லிபரல் கட்சி 7 ஆசனங்களையும், பசுமைக் கட்சி முதன்முறையாக ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளன.