முஸ்லிம்கள் சிகரெட் புகைக்க தடை!

0
856
Muslim attack using knife related smoking issue

பிரான்ஸில், இஸ்லாமியர்களின் ரம்ழான் நோன்பு காலத்தில் சிகரெட் புகைத்தமைக்காக நபர் ஒருவருக்கு கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. Muslim attack using knife related smoking issue

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை Lys-lez-Lannoy இல் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலுக்கு இலக்கான நபர் வீதியின் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு சிகரெட் புகைத்துள்ளார். அவரை 3 நபர்கள் சுற்றி வளைத்து சிகரெட் புகைத்தது தொடர்பில் வாதிட்டனர்.

ரம்ழான் நோன்பு காலத்தில் சிகரெட் புகைப்பது தவறு என அவர்கள் வலியுறுத்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இந்த சம்பவம் முடிவில் குறித்த நபர் கத்திகுத்துக்கு இலக்கானார். இரண்டில் இருந்து நான்கு தரம் கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு இரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த நபர் ஒருவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், நேற்று இரவு இச்சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை கைது செய்தனர். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**