இரண்டாவது தடவையாக திருமண பந்தத்தில் இணையும் கரீஷ்மா கபூர்..!

0
535
Karisma Kapoor second marriage soon,Karisma Kapoor second marriage,Karisma Kapoor second,Karisma Kapoor,Karisma

பிரபல இந்தி நடிகையும், பழம்பெரும் நடிகர் ரந்தீர்கபூர் மகளுமான கரீஷ்மா கபூர் தனது நீண்டநாள் நண்பரை இரண்டாவது தடவையாக திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.(Karisma Kapoor second marriage soon)

நடிகர் சயீப் அலிகானை மணந்துள்ள நடிகை கரீனா கபூரின் மூத்த சகோதரியான கரீஷ்மா கபூர், முன்னணி கதாநாயகியாக இருந்தபோது பல சர்ச்சைகளில் சிக்கினார்.

அஜய்தேவ்கானும், கரீஷ்மா கபூரும் காதலித்து பின்னர் பிரிந்தனர். அதன்பிறகு அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும், கரீஷ்மாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து பிறகு திருமணம் நின்றுவிட்டது.

அதன் பிறகு மும்பை தொழில் அதிபர் சஞ்சய் கபூரை 2003-ல் திருமணம் செய்துகொண்டு 11 வருடங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

2016-ல் கரீஷ்மாவும், சஞ்சய் கபூரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இப்போது கரீஷ்மா கபூருக்கு 43 வயது ஆகிறது. சமீப காலமாக கரீஷ்மாவும் அவருடைய நீண்ட கால நண்பர் சந்தீப் தோஸ்வானியும் நெருக்கமாக பழகுவதாக கிசுகிசுக்கள் பரவின. இருவரையும் பல இடங்களில் ஜோடியாகவும் பார்க்க முடிந்தது.

இந்நிலையில், சந்தீப்பை கரீஷ்மா 2-வது திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்து இருக்கிறார் என்றும், ஆகஸ்டு மாதம் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது என்றும் தகவல்கள் பரவின.

இதுகுறித்து ரந்தீர் கபூர் கூறும்போது.. :-

“கரீஷ்மா திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எனக்கும் விருப்பம் உள்ளது. அதுகுறித்து அவரிடமே பேசினேன். ஆனால் கரீஷ்மா திருமணம் செய்துகொள்ள தயாராக இல்லை” என்றார்.

<MOST RELATED CINEMA NEWS>>

காலா : திரை விமர்சனம்..!

எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..!

மேலங்கியை விலக்கி நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன் கபூர்..!

நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

கமலின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..!

மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!

நானியின் மோசமான படங்கள் விரைவில் : மீண்டும் மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tags :-Karisma Kapoor second marriage soon

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 09-06-2018