Ontario தேர்தல்: வெற்றிவாகை சூடினார் டக் போர்ட்!

0
584
Ontario Election Results

Ontario மாகாண தேர்தலில் Progressive Conservative கட்சி வெற்றிபெற்றுள்ளது. Ontario Election Results

இதுவரை வந்த முடிவுகளின் படி அக்கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது.

இதன்படி கட்சிக்குத் தலைமை தாங்கிய டக் போர்ட் முதல்வராக தெரிவாகியுள்ளார்.

இதன்படி மாகாணத்தில் 15 ஆண்டுகளாக நீடித்த லிபரல் கட்சியின் ஆட்சி நிறைவுக்கு வந்துள்ளது.

மாகாணத்தின் எதிர்க்கட்சியாக புதிய ஜனநாயகக் கட்சி உருவெடுத்துள்ளது.

இதேவேளை லிபரல் கட்சி பலத்த சரிவை சந்தித்துள்ளது. குயின்ஸ்பார்க்கில் பல ஆசனங்களை அக்கட்சி இழந்துள்ளது.

தேர்தல் தோல்வியை அடுத்து கத்லீன் வெய்ன், கட்சியின் தலமைப் பதவியை ராஜிமா செய்துள்ளார்.

 

 

 

இந்த வெற்றிக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Ontario மாகாண வரலாற்றில் முதல் தடவையாக நான்கு கட்சிகளின் தலைவர்கள் மாகாணசபைப் பதவிக்குத் தெரிவாகியுள்ளனர்.

PC Doug Ford

NDP Andrea Horwath

Liberal Kathleen Wynne

Green Mike Sheinder