வேலையை பறித்த ஆத்திரத்தில் மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்ட ஊழியர்

0
189
Incident occurred Gurgaon Haryana superintendent shot dead employee

Incident occurred Gurgaon Haryana superintendent police dead employee

வேலை பறிபோன ஆத்திரத்தில் மேலதிகாரியை ஊழியரே துப்பாக்கியால் சுட்டடுள்ள சம்பவம் ஒன்று அரியானா மாநிலம் குர்கானில் இடம்பெற்றுள்ளது.

அரியானா மாநிலத்தின் குர்கான் நகரில் அமைந்துள்ளது ஜப்பான் நாட்டு கார் தொழிற்சாலை. இங்கு வேலை செய்து வரும் ஊழியர் தயாசந்த். இவர் வேலைக்கு சரிவர வராமலும் வேலையிலும் அலட்சியமாக நடந்து கொண்டதால் இவர் மீது புகார் வந்தது.

அந்த கார் நிறுவனத்தின் மேலதிகாரியாக எச்.ஆர். எனப்படும் மனித வள மேம்பாட்டுப் பிரிவு தலைவராக இருப்பவர் தினேஷ் சர்மா. இதையடுத்து, தயாசந்த்தை பணியில் இருந்து நீக்கினார் தினேஷ் சர்மா. இதனால் அவர்மீது ஆத்திரம் கொண்டார்.

இந்நிலையில், தினேஷ் சர்மா நேற்று காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது தனது கூட்டாளிகள் சிலருடன் தயாசந்த் பைக்கில் பின்தொடந்து வந்தார். ஆளில்லா இடத்தில் காரை தடுத்து நிறுத்திய தயாசந்த் துப்பாக்கியால் தினேஷ் சர்மாவை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

தகவலறிந்து அங்கு வந்த பொலிஸார் தினேஷ் சர்மாவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தயாசந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Incident occurred Gurgaon Haryana superintendent police dead employee

More Tamil News

Tamil News Group websites :