எல்லோரும் பிரதமர் மோடியை அவமதிக்கிறார்கள்; ஆளுநரிடம் புகார் அளித்த பா.ஜ.க.

0
433
Andhra Pradesh Prime Minister insulted Modi government Telugu Desam

Andhra Pradesh Prime Minister insulted Modi government Telugu Desam

ஆந்திரா மாநிலத்தில் எல்லோரும் பிரதமர் மோடியை அவமதிக்கிறார்கள் என்று தெலுங்கு தேசத்திற்கு எதிராக பா.ஜ.க. ஆளுநரிடம் புகார் அளித்துள்ளது.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக பா.ஜ.க.வுடன் இருந்த கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது. இதையடுத்து தெலுங்கு தேச தலைவர்கள் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க. சார்பில் தெலுங்கு தேசத்திற்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக மிகவும் மோசமான மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

Andhra Pradesh Prime Minister insulted Modi government Telugu Desam

More Tamil News

Tamil News Group websites :