பங்களாதேஷ் அணியை தினறடித்த ரஷீட்!!! : மயிரிழையில் பறிபோனது வெற்றி

0
524
afghanistan beat bangladesh 2018

ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு-20 போட்டியில் திரில் வெற்றிபற்ற ஆப்கானிஸ்தான் அணி, பங்களாதேஷ் அணியை வைட்வொஷ் செய்துள்ளது.

தெஹ்ரா துணில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலி்ல் துடுப்பெடுத்தாடியது.

சிறப்பாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி சார்பில் செமியுல்லாஹ் சென்வாரி 33 ஓட்டங்கள், அஷ்கஹார் ஸ்டெனிக்ஷாய் 17 ஓட்டங்கள் மற்றும் மொஹமட் சேஷாட் 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சை பொருத்தவரையில் நஷ்முல் இஸ்லாம் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி ஆரம்பத்தில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தமிம் இக்பால் 5 ஓட்டங்கள் சௌமிய சர்கார் 14 ஓட்டங்கள், லிடன் டாஸ் 12 ஓட்டங்கள் மற்றும் சகிப் அல் ஹசன் 10 ஓட்டங்கள் என அடுத்தடுத்து ஆட்டமிந்தனர்.

எனினும் இறுதியாக மொஹமதுல்லா மற்றும் ரஹீம் ஆகியோர் சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவித்தனர்.

அதிரடியாக ஆடிய ரஹீம் இறுதி ஓவரின் முதல் பந்தில் 44 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, மொஹமதுல்லா போட்டியின் இறுதிப்பந்தில் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பங்களாதேஷ் அணி இறுதிப்பந்து ஓவருக்கு 9 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில், 7 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சில் ரஷீட் கான் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டினை வீழ்த்தியதுடன், தொடர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொண்டார்.

இந்த தொடரின் வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணியை, முதல் இருபதுக்கு-20 தொடரிலேயே வெள்ளையடிப்பு செய்த பெருமையை ஆப்கானிஸ்தான் அணி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>

afghanistan beat bangladesh 2018, afghanistan beat bangladesh 2018