“இவரை போன்ற பயிற்றுவிப்பாளரை இதுவரையில் பார்த்ததில்லை” : உண்மையை வெளிப்படுத்திய ரஷீட் கான்

0
432
Rashid Khan Muralitharan Bowling Coach news Tamil

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீட் கான் இலங்கை அணியின் முன்னாள் நட்ச்சத்திர சுழற்பந்து பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பயிற்றுவிப்பு தொடர்பில் புகழ்ந்துத்தள்ளியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீட் கான் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களால் பாராட்டப்பட்டு வருகின்றார்.

அவரது நுணுக்கமான பந்து வீச்சு மற்றும் அணியில் அவரது பங்களிப்பு என்பன மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில், இரண்டாவது இடத்தை பிடித்திருந்த ரஷீட், ஹைதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கும் முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் ஹைதராபாத் அணியில் விளையாடிய ரஷீட், இலங்கை அணியின் முத்தையா முரளிதரனிடம் பந்து வீச்சி பயிற்சிகளை மேற்கொண்டார். தற்போது முரளிதரனின் பயிற்றுவிப்பு குறித்து ரஷீட் கான் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகயில்,

“நான் பல பயிற்றுவிப்பாளர்களின் கீழ் பயிற்சிகளை பெற்றுள்ளேன். அதில் முத்தையா முரளிதரனின் பயிற்றுவிப்பு மிக வித்தியாசமானது. அவர் இதுவரையில் எனது பந்து வீச்சை மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டதில்லை.

அவர் எனக்கு பயிற்சி கொடுப்பதை விட, அவரது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார். போட்டியின் எந்த தருணத்திலும் பொறுமையாக, நிதானமாக தனது பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டும். போட்டியை ரசித்து விளையாட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமின்றி “என்னைவிட, உங்களுக்கு அதிகமான திறமை அதிகமாக இருக்கிறது” என முரளி அவர்கள் குறிப்பிட்டமையை மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

<<Tamil News Group websites>>

Rashid Khan Muralitharan Bowling Coach news Tamil, Rashid Khan Muralitharan Bowling Coach news Tamil