மீண்டும் சேர மறுத்த காதலி பட்டப்பகலில் சுட்டுக்கொலை (சி.சி.டிவி காணொளி)

0
1194
Thailand Bangkok Shooting

Thailand Bangkok Shooting

பிரிந்த முன்னாள் காதலனொருவன் , தனது காதலியை பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்த கொடூர சம்பவமொன்று தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

புகாபொங் சிட்டரூம் என்ற 24 வயது நபரே தனது காதலியான நட்சரீயா தப்ரஜித் என்ற 21 வயதான தனது காதலியை சுட்டுக்கொலை செய்துள்ளார்.

தாய்லாந்தின், பேங்கொக்கில் உள்ள பெண்ணின் வீட்டருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இருவரும் ஒருவரை ஒருவர் ஐந்து வருடங்களாக அறிந்திருந்ததாகவும்,காதலர்களான இருவரும் அண்மையில் பிரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணை பார்க்க காதலன் அங்கு வந்துள்ளார். அவருடன் பேச அப் பெண் மறுத்த நிலையிலேயே காதலன் அப்பெண்ணை சுட்டுள்ளார்.

இதன்பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார் அந்த நபர். வாய்க்குள் துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொண்ட போதிலும், துப்பாக்கிக் குண்டு கன்னத்தின் வழியாக வெளியேறியதால், அவர் பிழைத்துக்கொண்டுள்ளார்.

தற்போது அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தின் சி.சி.டிவி காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

Video Credit: Celebrity News

https://www.youtube.com/watch?v=iqjbEP1ST3k